அவள் தந்த
முத்தத்தில் சிவந்து போனது
கண்கள்
இயேசுவின்
சிலுவை எங்கே ?
என் பாவங்களை சுமக்க
வண்ணத்துப்பூச்சியின் அழகில்
மெய் மறந்து சிரிக்கிறது
பூக்கள்
காகித பூவின் கலக்கலான
அழகில் வரம்பு மீறுகிறது
வண்ணத்துப்பூச்சி
அவள் படித்த
ஹைக்கூவில்
காதல் இல்லை
காதலின் இன்னொரு பெயர்
கத்திரிக்காய் என்பது
அவளுக்கு தெரியாது
நானும் அவளும்
காதலித்தபோது நினைவு மட்டும்
தூங்கி வழிகிறது
காந்தியை சுட்ட
இந்திய சுதந்திரம்
தேசியகீதம் படுகிறது
புத்தனின்
கோவிலுக்குள் நிர்வாணம்
அவசியம் இல்லை
காந்தியின் கையில்
கைத்தடி பதிலாக
துப்பாக்கி
புத்தனின் மௌனத்தில்
பிட்சை கேட்கிறது
சாபங்கள்
அன்பே சிவம்
அறியாதவன் செய்வான் தவம்
அறிந்தவன் செய்வான் அறம்
நிர்வாண சாமியார்
ஊர்வலத்தில் சிரிக்கிறான்
பிச்சைக்காரன்
ஜனநாயகத்தில்
லஞ்சம் ஊழல் வாழ்க
மக்கள் ஒழிக
அந்தக் காதலுக்கு
மரியாதை கட்டிலறை
மட்டும்தான்
என் காதலில் நீ இல்லை
உன் காதலில் நான் இல்லை
ஆனாலும் தொடர்கிறது நம் காதல்
கோபம் வருகிறது
புத்தனை கூப்பிடுங்கள்
என்னை அடிக்க
அந்த சிரிப்பில் வாழ்கிறது
காதல் கொஞ்சம் சிரி
பூக்கள்
போதி மரத்தடியில்
காணவில்லை
புத்தனை இன்று
அழுகிறது பொம்மை
மீண்டும் அடிக்கிறது
சிரிக்கும் குழந்தை
புத்தன் யார்
கேள்வி கேட்காதே
நீதான் அது
வண்ணத்துப்பூச்சியின்
காதலில் முத்தங்களை
கற்பிக்கப்படுகிறது
அந்தத் துப்பாக்கிக்குள்
தோட்டாக்கள் இல்லை
சுதந்திரம் கேட்கிறது
சுதந்திர தினம்
கொஞ்சம் மிட்டாய்கள்
சிரிக்கும் குழந்தைகள்
பழைய குளத்துக்குள்
எம்பி குதித்து சண்டை போடுகிறது
பச்சை தவளை
என் தேசத்தில்
நிர்வாணம் கூட
பக்தி தான்
வானத்துக்குக் கீழே
சத்தமிடுகிறது எங்கள் ஊர்
காலி குடங்கள்
அவள் திறந்த முத்தம்
ஹைக்கூ எழுதுகிறது
என் இதயத்தில்
நிர்வாணம் மட்டுமே
இங்கு நிஜமாய் போனதால்
காமம் கடவுள்தான்
பூட்டிய கோவிலுக்குள்
கடவுளை திருடிவிட்டார்கள்
இன்று காலை
ஊழலை
கைது செய்யுங்கள்
ஜனநாயகம் வாழ்க
1992 இல் இருந்து தமிழில் ஹைக்கூ எழுதுவது என்பது வாழ்க்கையின் அம்சமாகவே கொண்டிருக்கும் இந்த ஓட்டேரி செல்வகுமார் சாதாரணப்பட்ட ஆளில்லை tamil தமிழில் எழுதும் வல்லமை படைத்தவர் உலகமெங்கும் பல மொழிகளில் தனது ஆய்வுகளை ஹைக்கூ கவிதைகளையும் பரவலாக எழுதுபவர் சீனா அரபி ஜப்பான் இந்தி துருக்கி...
எழுதிக்கொண்டிருப்பவர் எழுத்தால் என்ன சாதிக்க முடியும் என்பதை நிறைய தெரிந்து வைத்திருப்பவர் தமிழுக்கு தமிழுக்கு என்ன செய்ய முடியும் என்பதுவே அவர் நோக்கமாக இருப்பதால் இந்த ஹைகூக்கள் சின்ன பரிசாகவே தமிழுக்கு அமையும் என்பதில் சந்தேகமில்லை ஓட்டேரி செல்வகுமார் தமிழ் ஹைக்கூக்களை படியுங்கள் ரசியுங்கள் வாழ்த்துங்கள் வணக்கம்
Texte: otteri selvakumar
Bildmaterialien: otteri selvakumar
Cover: Bookrix
Lektorat: otteri selvakumar
Übersetzung: otteri selvakumar
Tag der Veröffentlichung: 25.12.2017
Alle Rechte vorbehalten
Widmung:
இது எனது தமிழ் ஹைக்கூ கவிதை நூல்
படித்து ரசித்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்
சமர்ப்பணம்
என் அப்பா + அம்மாவுக்கு