பம்பரமாய் வேலை செய்தாலும் சிடுசிடுக்காமல் செய்ய வேண்டும். இல்லையெனில் முடியாது என்று நகர்ந்து விட வீண்டும். செய்வதையும் செய்து விட்டு நாய் மாதிரி எரிந்து விழுவதில் என்ன புண்ணியம் , யாருக்கு லாபம். சேர்த்த புண்ணியம் அத்தனையும் கெட்டு போகும் ...
ஒரு இலை நிறைய சோறிட்டு தொட்டுக்க மலம் வைத்தர்போலாகும் ... ( nanjil )
வெட்கம் என்பது மின்னலைப்போல சில நொடிகளே இருக்க வேண்டும்
வெகு நேரம் வெட்கப்படும் பெண் வேடிக்கைபோருளாகவே காட்சி தருகிறாள்.
தன பிள்ளைகளுடன் தோழமையாக இருக்கும் தகப்பன் கொடுத்து வைத்தவன் ஆனால் மாப்பிள்ளையோடு சிநேகமாக இருப்பதென்பது எல்லோருக்கும் கிடைக்காத மிகப்பெரிய அதிர்ஷ்டம்
தன மகள் தன கண்ணெதிரே புருஷனால் கொடுமை ப்படுத்தப் படுவதை காண்கிற தகப்பன் மகா பாபி நூறு யானை மிதித்து கூளாக்கினாலும் வராத வேதனை தன குழந்தை கணவனால் கிம்சிக்கப்படும் போது வரும் மீட்கவும் முடியாமல் ஒளிந்து போகட்டும் என விடவும் முடியாமல் வெற்றுவேதனை நெஞ்சைக்கவ்வும்
அழகான பெண்களிடம் பெரிய குறை ஓன்று இருக்கிறது தன்னிடம் அன்பாய் பேசும் அனைவரும் தான் அழகாய் இருப்பதனால்தான் என நினைத்து விடுகிறார்கள் #பாலகுமாரன்
வாழ்வின் எந்த நெருக்கடியிலும் இந்த அளவு தன்னை விற்று வாழும் நிலையை ஆண் அடைந்ததே இல்லை.
அவனுக்குப் பெண்ணின் துயரம் புரியவே புரியாது
செடிகள் தம் விருப்பம் போல வாழ்கின்றன. இயற்கை யாரிடமும் எதற்கும் அனுமதி கேட்பதில்லை. ஒவ்வொரு செடியும் தனித்துவமான இலையமைப்பை, பூக்களை ,வாசனையை கொண்டுள்ளன. ஓர் இலை எந்த பக்கம் அசைய போகிறது என யாருக்கு தெரியும். ?எனக்கு செடிகள் மிக மிக ஆச்சர்யம் அளிக்கின்றன
சந்தோஷமான குடும்பங்கள் யாவும் ஒன்று போலவே இருக்கின்றன. ஆனால் துயரம்படிந்த குடும்பங்கள் ஒவ்வொன்றும் தனக்குரிய வழியில் துன்பப்படுகின்றன - டால்ஸ்டாயின் அன்னா கரீனினா நாவலின் முதல்வரி
வேட்டையை விடவும் கழுகுகள் உலகை வேடிக்கை பார்க்கத் தான் அதிகம் விரும்புகின்றன. அதிலும் தன் அகன்ற சிறகை அடித்துக் கொண்டு யாரும் தொடவே முடியாத உயரத்தில் ஏறி நின்று உலகைக் காண்பதில் ஆனந்தம் கொள்கின்றன. அதில் ஏதோ ஒரு இன்பமிருக்கிறது
முதலாளித்துவ உலகில் பணத்துக்கு ஒரு குறியீட்டு மதிப்பு உள்ளது. நாய்க்கு பயிற்சியளிக்கையில் முதலில் சாப்பாடு கொடுத்து “வா” என்பார்கள். நன்றாக பயின்ற பின் அதனிடம் “வா” அல்லது “உட்கார்” என்றால் சாப்பாடு என்று தான் பொருள் படும். சாப்பாட்டு சுவை என்கிற ஒற்றைப் பொருளுக்காக வெவ்வேறு அர்த்தமுள்ள எத்தனையோ சொற்களை கற்கும். அதற்கு அந்த உணவு தேவையில்லாமல் போகும் போது கூட அந்த சொல்லுக்கு அடிபணியும். நவீன மனிதனுக்கு “சாதனை” என்ற சொல்லும் அப்படித் தான் மாறியுள்ளது.
தந்தை சம்பாதித்ததை செலவு செய்ய பிள்ளைகளுக்கு இருக்கும் உரிமை, பிள்ளைகள் சம்பாதிப்பதில் சிறிதேனும் செலவு செய்யும் உரிமை தந்தைக்கு இருக்கிறதா யோசியுங்கள்
அவளது மனம் சதா தூய்மையையும் சுத்தத்தையும் வேண்டிக் கொண்டிருக்கிறது, நடப்பு உலகமும் உறவுகளும் அவளைத் தொடர்ந்து மாசுபடுத்திக் கொண்டேயிருக்கின்றன, அதை அவள் எதிர்ப்பதில்லை, மாறாக தண்ணீரின் வழியே தன்னைத் தூய்மைபடுத்திவிட முடியும் என்று நம்புகிறாள், ஒரு தாதியைப் போல தண்ணீர் அவளைத் தேற்றுகிறது. தண்ணீரோடு பெண்களுக்கு உள்ள உறவு ஆண்களால் ஒரு போதும் புரிந்து கொள்ளபட முடியாதது
பொது இடங்களில் அழ வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளும் ஆண்கள், புறஞ்சொல்லும் ஆண்கள், கோள்மூட்டும் ஆண்கள் கோழைகள் மட்டுமல்ல, தந்திரசாலிகளும் கூட! Kutti Revathi
இனப்பெருக்க சடங்கின் உச்சபட்ச வக்கிரம் மஞ்சள் நீராட்டு விழா எனும் "என் மகள் தயாராக இருக்கிறாங்கோ" என்னும் அதிகார பூர்வ அறிவிப்பு.
இந்த இனப்பெருக்க ஆரவாரத்தின் மற்றொரு கோடி இதே பெண்கள் மீதான அடக்குமுறை: மாதவிடாயின் போது ஒதுக்கி வைக்கப்படுவது
பால்யத்தில் கொய்யா என்றால், அலாதி மோகம். கொய்யா மரத்தின் வழவழப்பான உடலே இந்தக் கவர்ச்சிக்குக் காரணமாய் இருக்கலாம் - ந.பிச்சமூர்த்தி
ஏற முடியாத கொய்யா மரங்களே இல்லை. கன்னத்தை அதன் மேல் வைத்தால் ஒரு மெல்லிய குளிர் சுகமான வழவழப்பு - தினமும் தேடினால் ஒரு கனிந்த பழம் அணிலுக்கும் தெரியாமல் எனக்காக காத்திருக்கும் - மது
கடவுள் காதலைப் படைத்தார், சாத்தான் காமத்தைப் படைத்தான். விலக்கப்பட்ட கனியைப் புசித்ததனால் வந்த வினை. மனித இருதயம் கடவுளின் சுவாசத்தால் நிரம்பியிருக்கிறது. வயிறோ சாத்தானின் விலக்கப்பட்ட கனியினால் நிரம்பியிருக்கிறது. அதனால்தான் நம்மால் கடவுளையும் நிராகரிக்க முடியவில்லை, சாத்தானையும் விலக்க முடியவில்லை.-devi bharathi
பாதி அழுகையிலேயே காரணத்தை மறந்து விட்டு
அழுகையை மட்டும் தொடரும் குழந்தை. – araathu
சண்டையில் முடியக்கூடும் என்ற நினைப்பிலேயே
பேசுவதைக் குறைத்துக் குறைத்து பின்னாட்களில்
பேசுவது நின்றுவிடுகிறது தாம்பத்தியத்தில் -மிருதுளா @mrithulaM
மான்களை சிங்கம், புலி ஏன் நாய்கள் கூட துரத்துகின்றன Animal Planetடில்
மொத்த உலகமும் உன்னிப்பாக கவனித்து மானைக்கொன்றதும் மகிழ்ச்சி அடைகின்றனர்
என் மனம் மட்டும் மானுடன் ...அது எப்படியாது தப்பி ஓடி விடாதா என மனம் தினமும் எண்ணித் தோற்கிறது ...
பெண்கள் இந்த உலகக்காட்டில் சதா துரத்தப்படும் மான்கள் போலாகி விட்டனர்
பெரும்பான்மையான கயவர்கள் நாம் நினைப்பது போல இல்லாமல் சாதாரணமான எளியவர்களாகவும் இருக்கிறார்கள்
அயோக்கியர்கள் சினிமாவில் கண்பிப்பது போல பெரிய மீசையும் கன்னத்தில் கருமருவும் கொண்டிருப்பதில்லை. கண்ணியமாக உலகுக்கு தன்னைக்காட்டிக்கொண்டு தான் இத்தனையும் செய்கிறார்கள். தன்னை நம்பி வரும் பக்தர்களை காவிகளும், சீடர்களை குருக்களும், குழந்தைகளை வயதான பாவிகளும் பாலியல் பலாத்காரம் செய்வது மானிடம் கொல்லும் மகா பாவம் தான்.
அப்பா அப்பா என்று தன்னை சுற்றி சுற்றி வந்த செல்ல மகள் தன கணவனை, எங்கிருந்தோ வந்தவனை பெருமையாக பேச பூரிப்பாக ஒட்டிக்கொள்ளும் காட்சி எந்த ஒரு தகப்பனுக்கும் மனநிறைவான ஒரு விஷயம்...
ஒரு சின்ன பொறாமை எங்கிருந்தோ வந்து ஒட்டிக்கொள்ளும்
Tag der Veröffentlichung: 10.10.2013
Alle Rechte vorbehalten
Widmung:
Balakumaran, S.ramakrishnan, Abilash, Jeyamohan and many more